அச்சிடுக

சமாதானத்தை முழுமையாக்கும் அற்புதமான நத்தாலாகுக

உலக முழுதுமுள்ள கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் அற்புதம் நிறைந்த நத்தால் தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களான சகல கிறிஸ்தவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு சமாதானத்தையும் அன்பையும் எடுத்துரைக்கின்றது. பெத்லகேம் நகரில் ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில் பிறந்த, அமைதி மற்றும் சமத்துவம் பற்றி உலக மக்களுக்கு மிக அழகாக போதித்த கிறிஸ்துவுக்கு காட்டும் உண்மையான நன்றியாவது, இனம், சமயம் மற்றும் சமூகமாக ஒன்றிணைந்து ஒத்துழைத்து சகவாழ்வு வாழ்வதுமாகும்.

அந்த ஒத்துழைப்புப் சகவாழ்வு பற்றியே உண்ணாட்டு பாடசாலைப் புலத்தில், கற்பித்தல் கற்றல் செயற்பாடுகள் ஊடாக எங்களுக்கு வலுயுறுத்தப்படுகின்றது. அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஊடாக நாட்டின் சகல இனங்களுக்கிடையேயும் ஒன்றிப்பை கட்டியெழுப்பும் தேசிய தேவைப்பாட்டின் பொருட்டு நாட்டின் சகல மக்களும் செயற்படுவது நத்தாலை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கும் சிறந்த செயற்பாடாகும்.

எனது பெயரில் பிள்ளையொன்றை ஏற்றுக்கொள்கிறவர் என்னை ஏற்றுக்கொள்கிறவராகிறார்” என்று ஒரு தருணத்தில் இயேசு கூறியிருக்கிறார். ஒரு பிள்ளைக்காக, அதன் எதிர்காலத்துக்காக செயற்பாட்டுத் திட்டங்களை உருவாக்கும் நம் அனைவருக்கும் அவருடைய செய்தி உண்மையான பின்புலமாகும். இனம் – சமயம், கட்சி – நிறம் முதலான எந்த வித வேறுபாடும் இல்லாமல் நாங்கள் ஒருமனதாக இருப்பது பிள்ளைகளுக்காகவே. அவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக அமைவதற்காகவே.

உதயமாகும் அற்புதமான நத்தால் உலகில் சகல மக்கள் மனங்களிலும் அன்பு, பரிவு மற்றும் கருணை ஊற்றெடுக்கும், ஒவ்வொருவரின் கௌரவத்தைப் ஏற்று மதிக்கும், அமைதி மற்றும் அன்பை பரப்பும் மகிழ்ச்சிகரமான நத்தால் வாழ்த்துக்களைத் தெரித்துக்கொள்கின்றேன்.

கௌரவ அகில விராஜ் காரியவசம் (பா.உ.)
கல்வி அமைச்சர்

படிப்புகள்: 2410